இம்முறை மே தினத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக நடத்தவுள்ளதாக அக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அனைத்து மக்களின் உழைப்பையும் கொண்டாடும் வகையில் மே தினத்தை கொண்டாடுவோம் என்றும் விவசாயிகள் உட்பட தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளையும் உரிமைகளையும் வழங்குவது கட்சி உட்பட அனைவரது பண்பு என்றும் தெரிவித்தார்.
இதேவேளை மே தின பேரணி குறித்து, கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த முடிவை அடுத்து எடுக்கப்பட்டது என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணி கொழும்பில் தனியாக நடைபெறும் என்றும் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.