கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி மேற்படி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழகத்திற்கு 20 இலட்சம் தடுப்பூசிகளை உடனே அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், தமிழகத்தில் தினமும் 2 இலட்சம் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 தடுப்பூசிகள் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் முதல் தடுப்பூசி டோஸை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.