நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த தகவலில் உண்மையில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.
மேலும் எவ்வளவு காலத்துக்கு ஒக்ஸிஜன் கையிருப்பில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அறிவிக்குமாறு ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள், ஒக்ஸிஜன் 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.