ஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும் வகையில் இருந்தால் அவை கவனத்தில் கொள்ளப்படும் எனவும் மியன்மார் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மியன்மார் இராணுவத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், வெவ்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கும், ஐந்து அம்ச உடன்படிக்கையினை ஆசியான் அண்மையில் வெளியிட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.