இந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவ சிகிச்சை மற்றும் ஒக்சிஜன் ஆகியவை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா குறித்த சரியான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதுமான மருத்துவ அறிவுறுத்தல்கள் இல்லாத சூழலில் இந்தியர்கள் பலர் உயிருக்கு பயந்து மருத்துவமனையை நோக்கி விரைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே போதுமானது எனத் தெரிவித்த அவர், இது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரிப்பதற்கு பொதுவெளியில் விழாக்களுக்காக அதிகமானோர் கூடுவதே காரணம். இதனைத் தவிர்த்தாலே வைரஸ் தாக்கம் குறையும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.