சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து இதுவரை 703 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அவர்களில் பலர் தடுப்புக்காவலில் உள்ளதாகவும் மற்றுமொரு தரப்பினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணையில் உள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.