ஓய்வுநிலை ஆசிரியை எஸ்.தெய்வேந்திரமூர்த்தி உருவாக்கிய ”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முதல்வர் ரி.வரதன் தலைமையில் இடம்பெற்றது.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் ஆலம்பமான குறித்த நிகழ்வில் தமிழ்த்தாய் இசைக்கப்பட்டதை அடுத்து வெளியூட்டு நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கலந்து கொண்டதுடன், மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிவசிவா உள்ளிட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
”கரும்பு” சிறுவர் பாடல் நூலினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வெளியிட்டு வைக்க மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிவசிவா பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ”கரும்பு” சிறுவர் பாடல் இறுவெட்டினை மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிவசிவா வெளியிட்டு வைக்க நடனபாட ஆசிரியை எஸ்.சிறிதரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டதுடன். விருந்தினர் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.