மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறையினருக்கு கொரோனா தடுப்பு இரண்டாவது ஊசி ஏற்றும் நடவடிக்கை சம்பிராயபூர்வமாக இன்று ( வெள்ளிக்கிழமை ) மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகாதாரதுறையினருக்கு முதலாவது ஊசி ஏற்றப்பட்டது. இருந்தபோதும் இந்த இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், தாதியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை ஏற்றினர்.
இன்று மட்டும் 90 பேருக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இநாளை இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடமபெறும் என மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி கிரிசுதன் தெரிவித்தார்.
இதேவேளை இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் சுகாதாரதுறையினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.