தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதுது.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போதைய நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கூட்டணியில், தி.மு.க. 115 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் ம.தி.மு.க. நான்கு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களிலும் ஏனைய கட்சிகள் ஒன்பது இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
அதேபோல், அ.தி.மு.க. கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அதில், அ.தி.மு.க. 73 இடங்களிலும், பா.ம.க. ஆறு இடங்களிலும் பா.ஜ.க. நான்கு இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்தில் முன்னிலையிலும் உள்ளன.
இதேவேளை, மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது,
எனினும், தேர்தல் முடிவுகளில் இது முதற்கட்ட அறிவிப்புக்கள் என்பதால் இறுதித் முடிவுகள் இன்று இரவே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.