கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹாவில் மாத்திரம் 551 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய செயற்பாட்டு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய திவூலபிட்டியவில் 120 பேரும் மினுவாங்கொடாவில் 51பேரும் சீதுவயில் 63 பேரும் கம்பஹாவில் 44 பேரும் கட்டானாவில் 58பேரும் நீர்கொழும்பில் 24பேரும் கிரிண்டிவேலாவில் 20பேரும் மற்றும் பல்லேவெலாவில் 19 பேரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பானதுர தெற்கில் 67 பேருக்கும் மீகஹதென்னவில் 62பேருக்கும் புலத்சிங்கலவில் 43பேருக்கும் அகலவத்தவில் 20 பேருக்கும் ஹொரனவில் 21பேருக்கும் பானதுரவில் 27பேருக்கும் களுத்துறையில் 28பேருக்கும் மத்துகமவில் 31பேருக்கும் வெலிபெண்ணவில் 13 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 321 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலியந்தலவில் 50 பேருக்கும் தலங்கமவைச் சேர்ந்த 35பேருக்கும் மொரட்டுவைச் சேர்ந்த 30 பேருக்கும் கொட்டாவைச் சேர்ந்த 27பேருக்கும் ஹோமகமவிலிருந்து 18 பேருக்கும் கொழும்பு நகராட்சி மன்றப் பகுதியைச் சேர்ந்த 32 பேருக்கும் மற்றும் அவிசாவெல மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்த தலா 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.