கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டை உடனடியாக முடக்குவதே சிறந்த தீர்மானமென மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான பேராசிரியர் வைத்திய நிபுணர் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது பதிவாகும் அன்றாட மரணம் மற்றும் தொற்றுத் தரவை நம்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் இறப்புகளின் எண்ணிக்கை 20,000யைக் கூட கடக்கும் வாய்ப்பு உள்ளதுடன் செப்டெம்பர் மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500,000க்கும் அதிகமாகலாம் என்றும் சஞ்சய பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆகவே இத்தகையதொரு சூழ்நிலையை தடுப்பதற்கு நாட்டை முழுமையாக முடக்கி கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உரிய செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.