இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இரத்மலானை,பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய, எல்கடுவ மெனிக்கின்ன, மாத்தறை, தல்கஸ்வல, மொரன்துடுவ, மஹரகம, ஹல்தொட, வஸ்கடுவ, களனி, மொரட்டுவ மற்றும் பாணந்துறை பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்தோடு, மாத்தளையில் 3 மரணங்களும் மடுல்கல பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு உயிரிழப்புகளும் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்களும் 8 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 641 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 607 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.