தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.
குறித்த கடிதத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல், வேலைவாய்ப்பின்றி தவிப்போருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு உடனடியாக கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டில் தடுப்பு மருந்து உற்பத்தி விரிவாக்கத்திற்கு உடனடி உரிமம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விஸ்டா திட்டத்தை உடனடியாக நிறுத்தி அதற்கு செலவிடும் பணத்தை ஒக்சிஜன் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கு செலவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.