தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
13 கட்சி உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இருவர் கலந்துகொள்ள முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து கொரோனா தொற்று குறித்து மாவட்ட ஆட்சியருடன் உடனுக்குடன் ஆலோசனைகளை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.