கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் மன்னாரில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதை மக்கள் தவிர்த்துள்ளனர்.
மேலும் இப்பகுதியிலுள்ள மக்கள், பொது போக்குவரத்தினையும் தவிர்த்துள்ளனர்.
இதேவேளை சுகாதார நடைமுறைகளை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை அவதானிக்க முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்