வேல்ஸில் உள்ள மக்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இங்கிலாந்தில் உள்ளவர்கள் திங்கட்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கு செல்லலாம் என்பது பிரித்தானிய அரசாங்கத்தின் ஆலோசனை.
ஆனால், வேல்ஸ் அமைச்சர்கள் வேல்ஸில் உள்ளவர்கள் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், திங்கட்கிழமை முதல் வேல்ஸ் கொவிட் எச்சரிக்கை நிலை இரண்டிற்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கவுள்ளார்.
அடுத்த வேல்ஸ்; அரசாங்கத்தின் கொவிட் கட்டுப்பாடுகள் மறுஆய்வு ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
இந்த அறிவிப்பு உட்புற விருந்தோம்பல் வணிகங்கள் மற்றும் உட்புற பொழுதுபோக்கு இடங்கள் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதாகும்.