ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய உறவு கொண்ட இவர்கள் இருவருடன் ஜனாதிபதி தேர்தலில் 300 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட அனுமதி கோரியுள்ளனர்.
இந்நிலையில் 300 மேற்பட்ட வேட்பாளர்கள் குறித்து 12 இறையியலாளர்கள் மற்றும் நீதிபதிகள் கொண்ட சபை இறுதி முடிவை அறிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2017 தேர்தலுக்கு அனுமதி கோரிய 1,600 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 6 பேருக்கு மட்டுமே ஒப்புதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்த்க்கது.
1988 இல் பல ஆயிரம் அரசியல் கைதிகளை படுகொலை செய்ததில் 60 வயதான ரைசிக்கு பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு தற்போது அயதுல்லா கமேனியின் ஆலோசகராக பணியாற்றும் 63 வயதான பழமைவாத முன்னாள் அணுசக்தி பேச்சுவார்த்தையாளரான அலி லரிஜானி செயற்ப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரௌஹானிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட அனுமதி வழங்கப்படவில்லை.
2017 முதல் ஈரானில் நாட்டின் பொருளாதாரத்தின் நிலை பெரும் அதிருப்திகுள்ளாகிய நிலையில் 2018 ல் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.