காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பாஸ்டன், பிலடெல்பியா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நகரங்களின் வீதிகளில் பலர் திரண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுதந்திர பாலஸ்தீனம் என்ற பதாகையுடன் லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலஸ்தீனியர் ஒருவரின் வாழ்க்கை ஒரு இஸ்ரேலியர் ஒருவரின் வாழ்க்கைக்கு சமமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலை மேற்கொள்ளும் இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.