சிந்து நகரங்கள் மற்றும் ஏனைய நகரங்களில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டன
கராச்சியின் பழைய கிராமங்கள் நிர்வாகம், வீட்டுவசதி திட்டங்களுக்காக நிலங்களை மீட்டு வருகிறது.
இந்நிலையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்களை சிந்து ஐக்கிய கட்சி (Sindh United Party) மற்றும் கியூமி அவாமி தெஹ்ரீக் (Qaumi Awami Tehreek) ஆகியன இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த போராட்டங்களுக்கு சிந்து தாராக்கி-பசந்த் கட்சி (எஸ்.டி.பி) உட்பட பல தேசியவாத கட்சிகள் மற்றும் சில அமைப்புக்கள் ஆதரவு வழங்கியதாக டொன் தெரிவித்துள்ளது.
கடாப் மற்றும் கதோரிலுள்ள நிலங்களில் வசிப்பவர்களிடமிருந்து பஹ்ரியா நகர நிர்வாகம் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அவர்கள் “தங்கள் மூதாதையர் நிலங்கள்” என்று கூறிக்கொண்டு அதனை ஒப்படைக்கத் தயாராக இல்லை.
சமீபத்தில் பஹ்ரியா நகரத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதமேந்திய அதிகாரிகள், கதோரில் கிராமவாசிகளுடன் மோதியதில் ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.
இதன்போது போராட்டக்காரர்களிடம் பேசிய எஸ்.யூ.பி மற்றும் எஸ்.டி.பி தலைவர்கள் சிந்துவின் வளங்கள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் கராச்சியின் கிராமங்களை ஆக்கிரமிப்பதற்கான இந்த வகையான நடவடிக்கை, சிந்திகளை தங்கள் சொந்த மாகாணத்திற்குள் சிறுபான்மையினராக மாற்றுவதற்கான ஆட்சியாளர்களின் நோக்கத்தைப் பற்றியும் அவர்கள் கூறினர்.
அத்துடன் கிராமங்களை அழிப்பதை உடனடியாக நிறுத்தவும் இடிப்பதில் ஈடுபட்ட அனைவருக்கும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிராக வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை செஹ்வானில், தர்யா கான் லெகாரி, அஸ்கர் சோலங்கி, முகமது நவாஸ் ரிண்ட் மற்றும் குலாம் ஷபீர் புரிரோ ஆகியோரின் தலைமையில் S.U.P ஆர்வலர்கள் ஒரு எதிர்ப்பு பேரணியை நடத்தினர்.
பன் சையதாபாத் நகரில், உள்ளூர் S.U.P தலைவர்கள் உள்ளூர் பத்திரிகைக் கழகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னர் தெருக்களிலும் ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.