இலங்கை மேலும் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து பெறவுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என நம்புவதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இலங்கையில் ஸ்பூட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசி பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.
அதனைத்தொடர்ந்து, ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 15,000 டோஸின் முதல் தொகுதி மே 4 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து இலங்கை 7 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெறும் என்று அரசாங்கம் பின்னர் அறிவித்தது.
இந்த நிலையில், சில மாதங்களில் இலங்கை மொத்தமாக 13.5 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.