இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்செர், எதிர்வரும் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் தனது மீள் வருகையை நிரூபித்த ஆர்செருக்கு, மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். சசெக்ஸ் அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடந்த தொடரில், டெஸ்ட் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடிய ஆர்செர், கைவிரல் மற்றும் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு அதிகரித்ததால் அவர் ஒருநாள் போட்டி தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து, கைவிரல் காயத்துக்கு அறுவை சிகிக்சை செய்து கொண்ட அவர் ஐ.பி.எல். தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.