டாக்தே புயல் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான டாக்தே புயல் மராட்டியம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி குறித்த புயலினால் மாராட்டிய மாநிலத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.