நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் மீதான விவாதம் இடம்பெற்று 20 ஆம் திகதி வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதியளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.