இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 9 பேரின் வீடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலைவிட இது கடுமையானது என விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களினால், காஸாவின் வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதல் நீடித்தால் நிலைமை மிக மோசமாகும் எனவும் காஸா மேயர் யாஹ்ய் சர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காஸா பிராந்தியத்தின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்படாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது.
காஸாவில் ஏற்கெனவே தினமும் 8 முதல் 12 மணி நேரம் வரை மின் தடை இருக்கும் நிலையில், மின் நிலையம் செயல்படாவிட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதுவரையிலான தாக்குதலில் 61 குழந்தைகள், 36 பெண்கள் உள்பட 212 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இஸ்ரேல் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.