இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமரின் உரையை அடுத்து அதற்கு பதில் வழங்கும்படியாக கருத்து வெளியிடும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உரையின்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார்.
இதில் பொதுமக்களும் உள்ளடங்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இன்றைய நாளில் கொல்லப்பட்டார்கள்.
இராணுவம் மட்டுமன்றி பொது மக்களும் இறந்தார்கள் என்பதை நான் சபையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்தார்.