இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியும் நினைவேந்தல் நிகழ்வினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளது.
தமிழரசு கட்சி, தனது கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வினை இன்று நடத்தியுள்ளது.
இதில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.