கறுப்பு பூஞ்சை தொற்றைப்போல் பீகார் மாநிலத்தில் வெள்ளைப் பூஞ்சை தொற்றும் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கறுப்பு பூஞ்சை தொற்றை விட மிகவும் மோசமானது எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்று மூளை, சிறுநீரகம், வாய், வயிறு, மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை தாக்குவதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
கண்ணின் கீழ்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறிகள் இந்த நோய் பாதிப்பினால் தென்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நோய் தொற்றின் காரணமாக பீகார் மாநிலத்தில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.