மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.
டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை கப்பல் ஒன்றில் தங்கியிருந்தனர்.
குறித்த மிதவை கப்பலானது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் பணியாற்றிய 261 பேரும் நீரிழ் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த நபர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 186 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.