• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

Kolathur TVK MLA VS Babu passes away

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/11/19
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை – கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு (75) உடல்நலக்குறைவால் இன்று (19) பிற்பகல் காலமானார்.

தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்தவர் இவராவார்.

கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். (MGM) தனியார் மருத்துவமனையில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவக் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சுமார் 70 நாட்களாகத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

இதையடுத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இன்று மதியம் 2.24 அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த இரு வாரங்களாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாததால், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இது தொடர்பாக அறிக்கை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் தி.மு.க.வில் பயணித்த வி.எஸ். பாபு, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், இந்த ஆண்டு (2026) பெப்ரவரி 7ஆம் திகதி த.வெ.க.வில் இணைந்தார்.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட அவர், யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

முதலமைச்சராக இருந்தவரையே வீழ்த்தியதால், த.வெ.க. அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

வி.எஸ். பாபுவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகள் வெற்றிடமாக உள்ள நிலையில், அவற்றுடன் சேர்த்து கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

Related Posts

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் நீதிமன்றம்  சென்ற குணாளன் மீது வாள்வெட்டு
இலங்கை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் நீதிமன்றம் சென்ற குணாளன் மீது வாள்வெட்டு

2026-11-19
பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!
இலங்கை

பங்களாதேஷிற்கு அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுரவிற்கு அழைப்பு!

2026-11-18
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

2026-11-18
ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!
இங்கிலாந்து

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

2026-11-18
சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!
இலங்கை

சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது
இலங்கை

ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

0
2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

0
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

0
ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு….

ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு….

0
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடர்ச்சியான மழையால் வெள்ள அபாய எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: