இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீடுகள், வீதிகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் வானிலை மற்றும் வெள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


















