ஏர் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய விபரங்கள் இணையத்தின் வாயிலாக திருடப்பட்டுள்ளமையினால் சுமார் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை அதிகளவு பயணம் மேற்கொண்டவர்களின் பெயர், பிறந்த திகதி, கிரடிட் அட்டைகளின் விபரங்கள், தொலைபேசி இலக்கம் மற்றும் இரகசிய இலக்கங்கள் ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனம் மாத்திரமன்றி சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ், மலேசியா ஏயார்லைன்ஸ், கேத்தே பசிபிக், லூஃப்தன்ஸா, ஃபின் ஆகிய விமான நிறுவனங்களுடைய வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளமையினால் கிரடிட் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை அடிக்கடி மாற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.