இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 28பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை 41இலட்சத்து 83ஆயிரத்து 476பேர் வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 218பேர் பாதிக்கப்பட்டதோடு 133பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 91ஆயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 469பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 37இலட்சத்து 66ஆயிரத்து 660பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.