ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன் 179-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் எச்சரிக்கை செய்யத் தவறியதால் ஏற்பட்ட மனிதத் தவறே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தின் போது ரென்ஃபே ரயிலில் 397 பயணிகளும், இரியோ ரயிலில் 147 பயணிகளும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















