ஸ்பெயினில், மாட்ரிட் நகரையும் அந்நாட்டின் தெற்குப் பகுதியான அண்டலூசியாவையும் இணைக்கும் பாதையில் இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில் சேவை நிறுவனமான ‘அடிஃப்’ (Adif) புதன்கிழமை (28) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9 மணிக்குப் (0800 GMT) பின்னர் பதிவான இந்த விபத்துக்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
எனினும், இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாட்ரிட்டிலிருந்து செவில் செல்லும் வழித்தடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ரயில்வே நிறுவனமான அடிஃப் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனங்களுக்குச் சொந்தமான அதிவேக ரயில்களுக்கு இடையே, அதே பாதையில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.














