யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, குத்தனை வலிக்கண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுக்கொண்டு இருப்பதாக அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிலர், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில், சிறப்பு அதிரடி படையினர் துப்பாக்கி சூடு நடாத்தியமையில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார், பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.