நாட்டின் எல்லைகள் மீண்டும் திறப்பதற்கு சுகாதார அதிகாரிகள் அனுமதி வழங்கியதுடன் மாதத்திற்கு குறைந்தது 2,500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே தனது நோக்கம் என இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் மற்றும் இலங்கை எயார்லைன்ஸுடன் மொஸ்கோவிற்கும் கொழும்பிற்கும் இடையே வாரத்திற்கு குறைந்தது ஒரு விமானத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறியுள்ளார்.
தற்போது மாலைதீவினால் மாதத்திற்கு 20,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடிந்தால், உக்ரேனியர்களின் சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கும் இலங்கைக்கு குறைந்தது 2,500 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் வீரதுங்க கூறினார்.
சுற்றுலாதுறையை கட்டியெப்புவதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இந்த திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டன என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இருப்பினும் ரஷ்ய பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரப்படும் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் எல்லைகள் திறக்கப்பட்டு சுகாதார அதிகாரிகளின் அனுமதியை அடுத்தே இந்த நடவடிக்கை ஆரம்பமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.