பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேலிஸில் நான்கு இலட்சத்து 50ஆயிரத்து 26பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு கோடியே 61இலட்சத்து 21ஆயிரத்து 136பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 37ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 841பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 11இலட்சத்து 19ஆயிரத்து 86பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை ஒரு கோடியே 45இலட்சத்து 52ஆயிரத்து 24பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.