ஸ்கொட்லாந்தில் அதிக கொவிட் இறப்புகளைப் பதிவு செய்த மருத்துவமனையாக, ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மாறியுள்ளது.
அத்துடன், தேசிய சுகாதார சேவையின் கிரேட்டர் கிளாஸ்கோ மற்றும் கிளைட் சுகாதார சபை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லாந்தின் தேசிய பதிவுகள் (என்ஆர்எஸ்) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய மருத்துவமனையான குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் 809 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளாஸ்கோவின் ரோயல் மருத்துவமனை 628 இறப்புகளுடன் இரண்டாவது மிக உயர்ந்த வீதத்தைக் கொண்டுள்ளது.
பைஸ்லியில் உள்ள ரோயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் 425 கொவிட் தொடர்பான இறப்புகளும், எடின்பரோவின் ரோயல் இன்ஃபர்மேரி மருத்துவமனை தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 368 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.