இந்தியாவில் செயல்படுவதன் மூலம் இலாபமடையும் ருவிட்டர் நிறுவனம் நாட்டின் சட்டத்திட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
“டூல் கிட்” சர்ச்சையை தொடர்ந்து, ருவிட்டர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கைக்கு மத்திய அரசு பதிலடிகொடுத்துள்ளது.
இது குறித்து மின்னனு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ருவிட்டர் நிறுவனம் கூறுவதுபோல் இந்தியாவில் அதன் ஊழியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நூற்றாண்டுகளாக கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளை பின்பற்றி வரும் பாரம்பரியம் இந்தியாவுக்கு உள்ளது. தனது நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் சட்ட அமைப்பை ருவிட்டர் குறைத்தை மதிப்பிடுகிறது.
இந்தியாவில் செயல்படும் ருவிட்டர் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும். அதிக பயனாளர்களை கொண்டு குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டும் இந்த நிறுவனம் இந்திய விதிகளுக்கு உட்பட மறுக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.