இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டோரில் அதிகமான நோயாளிகள் அதாவது 512 பேர் களுத்துறையில் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் கம்பஹாவில் 443 பேருக்கும் கொழும்பில் 281 பேருக்கும் கண்டியில் 271 பேருக்கும் நுவரெலியாவில் 191 பேருக்கும் குருநாகலில் 177 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அத்தோடு இரத்தினபுரியில் 150 பேரும் மாத்தறையில் 98 பேரும் கிளிநொச்சியில் 94 பேரும் மாத்தளையில் 79 பேரும் காலியில் 77 பேரும் திருகோணமலையில் 75 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலையில் 56 பேருக்கும் புத்தளத்தில் 54 பேருக்கும் முல்லைத்தீவில் 53 பேருக்கும் பதுளை மற்றும் மட்டக்களப்பில் தலா 40 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 36 பேருக்கும் அனுராதபுரத்தில் 35 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் வவுனியாவில் 24 பேரும் யாழ்ப்பாணத்தில் 22 பேரும் அம்பாறையில் 19 பேரும் பொலன்னறுவையில் 13 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய ஐவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.