பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உணவு, காய்கறி, மீன் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய உற்பத்திகளை விநியோகிக்கும் லொரி மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இவற்றுக்காக, விசேட அனுமதிப்பத்திரம் தேவை இல்லை என தெரிவித்தார்.
சில்லறை வர்த்தகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் மத்திய நிலையஙகளில் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் பேலியகொடை மீன் சந்தையும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.