சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 70 மில்லியன் டொலரை ஏன் செலுத்துகிறது என்பதை விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த தடுப்பூசி ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் 15 டொலர் செலுத்தியுள்ளது என்றும் ஆனால் பங்களாதேஷ் அதற்கு 10 டொலர் மட்டுமே செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஒவ்வொரு டோஸுக்கும் செலுத்தப்படும் மேலதிக 5 டொலருக்கு என்ன ஆனது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
தொற்றைக் கையாள்வதில் அரசின் குறைபாடுகள் ஒரு பெரிய நெருக்கடியாக மாறியுள்ள இந்நிலையில் தடுப்பூசி விநியோகம் கூட குழப்பமாகிவிட்டது என்றும் தடுப்பூசிகளைப் பறிக்கும் சில குழுக்கள் அரசாங்கத்திற்குள் உள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கை வெற்றிகரமான தடுப்பூசி திட்டங்களை மேற்கொண்ட நற்பெயரைப் பெற்றதுடன், அன்று நாட்டை போலியோவிலிருந்து விடுவிக்க முடிந்தது என்றும் இந்த நற்பெயருக்கு இன்று களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.