நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பயணித்த கெண்டயினர் லொறியொன்று, ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் பாய்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளாகியது.
இதில் லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து, ஹக்கல பெரிய வளைவு பள்ளத்தில் இருந்த வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
குறித்த சம்பவத்தினால் வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதிலும், வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.