தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி மோதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
UPDATE – மூழ்கும் நிலையில் தீக்கிரையான கப்பல்..!
எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் நேற்று முதல் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் முன்னெடுப்பு
எம்.வீ. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சால்வர் குழுவுடன் இணைந்து இலங்கை கடற்படை குறித்த பணியை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இந்தியக் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடற்படையினர் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதனையடுத்து, தீயால் எரிந்துப் போன இந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.