இந்தியாவிற்கு எஸ் 400 ரக ஏவுகணைகளை வழங்கும் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணையானது தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவுவரையுள்ள விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்த ரக ஏவுகணை தொகுப்புகளின் 5 தொகுதிகளை கொள்வனவு செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவுடன் 5 பில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.