நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, சில பகுதிகளில் 150 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக களுத்துறை மாவட்டத்தின் இங்கிரியவில் 215.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்தமழைவீழ்ச்சி பதிவாகுமன அந்தத் திணைக்களம்எதிர்வுகூறியுள்ளது.