மலையகத்திலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நான்காவது நாளாக, இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கொட்டகலை மற்றும் ஹற்றன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இவர்கள் அனைவரும், காலையிலேயே தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று, ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.