நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பாகவே அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த தீ விபத்து காரணமாக லெஸ்போஸ் தீவில் உள்ள மோரியா முகாமில் கிட்டத்தட்ட 13,000 பேருக்கு தங்குமிடம் இல்லாமல் போனது.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக பதட்டங்கள் அதிகரித்த நிலையில் கடந்த செப்டம்பரில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.