இலங்கையில் நேற்று மட்டும் 99,742 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 66,463 பேருக்கும் முதல் டோஸ் 31,440 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1,576 பேருக்கு ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 263 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் 613,200 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ள என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.