இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள கோர்ப்வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 90 வீதம் பலனளிப்பதாக மத்திய அரசின் ஆலோசனை குழு வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவரான வைத்தியர் ஆரோரா இது குறித்து தெரிவிக்கையில், ‘அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் கண்டுப்பிடித்த நோவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.
இந்த மருந்து கொவிட்டை கட்டுப்படுத்துவதில் 90 சதவீத திறன் பெற்றது. இந்த தடுப்பூசி விலை குறைவாகவும் இருக்கும். இதே திறன் பெற்ற தடுப்பூசி இந்தியாவில் உருவாகி வருகிறது. பயாலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியானது அனைத்து வயதினருக்கும் ஏற்றதுடன், 90 வீதம் திறன் பெற்றது.
இந்த மருந்து தற்போது மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஒக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.